அநுராதபுரத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வரும் ஞானக்கா என்ற பெண்ணின் வீடு மற்றும் அவரது ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இதனால் ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பபட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி ஞானக்காவின் வீட்டை பொது மக்கள் சுற்றிவளைக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அத்துடன் அவரின் வீட்டிற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா உட்பட பலர், அனுராதபுரத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வரும் ஞானக்காவின் பக்தர்கள் எனவும் அந்த பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே நாடு நிர்வாகம் செய்யப்படுவதாகவும் கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here