பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டளஸ் அழகப்பெருமவை பிரதமாக நியமிக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகித்து தற்போது நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவங்ச தரப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பின் மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான தரப்பினர் இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் டளஸ் அழகப்பெருமவுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here