இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் பலன்களை பிராந்திய நாடுகள் நன்மைகளை பெறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் தொழில்களை அச்சுறுத்தும் அம்சமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் ஆடைத் துறையில் இலங்கையின் போட்டியாளர்களுக்கு நன்மைகள் சென்று கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இலங்கையின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக அண்டை நாடான இந்தியா நன்மையை பெறத்தொடங்கியுள்ளதாக எக்கோனோமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆடைகள் மற்றும் தேயிலை கட்டளைகள் இந்தியாவிற்கு திருப்பி விடப்படுவதாக எக்கனோhமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெருக்கடியின் காரணமாக, உலகளாவிய ஆடை கட்டளைகள், இலங்கையிலிருந்து இந்தியாவின் திருப்பூர் ஆடை மையத்திற்குத் திருப்பப்பட்டுள்ளன..

இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம் கூறியதாக தெ எக்கோனோமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

அதேநேரம் இந்திய தேயிலை தொழிற்துறையும் இலங்கை தேயிலை விற்பனை செய்த சந்தைகளில் இருந்து ஏற்றுமதி விசாரணைகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக தென்னிந்திய தேயிலை ஏற்றுமதியாளர் தலைவர் தீபக் ஸா தெரிவித்துள்ளார்

இலங்கையில் உள்ள அனைத்து தேயிலை பதப்படுத்தும் அலகுகளும் நாளொன்றுக்கு 12-13 மணித்தியாலங்கள் மின்சார தடைகளை எதிர்கொள்கின்றன மற்றும் அவற்றின் மின்சார உற்பத்தி இயந்திரங்களை(ஜெனரேட்டர்களை) இயக்குவதற்கு போதுமான எரிபொருள் இல்லை.

இது உற்பத்தி சீர்குலைவுக்கு வழிவகுக்கிறது மற்றும் அதன் மூலம் கறுப்பு தேயிலை இலங்கையின் ஏற்றுமதியை பாதிக்கிறது என்றும் தீபக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலாவிற்கு இந்தியா ஒரு முக்கிய ஆதார சந்தையாக உள்ளது. அத்துடன்; கடந்த இரண்டு மாதங்களில் இது மிகப்பெரிய சுற்றுலா போக்குவரத்து உருவாக்குனராக உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில்; இலங்கையின் நெருக்கடி நிலை காரணமாக இங்கு நடைபெறவிருந்த இந்திய சுற்றுலா வழிகாட்டிகளின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையில் எரிபொருள், மின்சாரம், எரிவாயு, அன்றாட நுகர்வோர் தேவைகள் போன்றவற்றின் பற்றாக்குறை மற்றும் நாட்டின் சில பகுதிகளில் அரசியல் அமைதியின்மை ஆகியவை, கொழும்பில் நடைபெறும் மாநாட்டை ஒத்திவைக்க தங்களை நிர்பந்தித்துள்ளதாக இந்திய சுற்றுலா வழிகாட்டிகளின் சம்மேளன தவைலர் ஜோய்டி மயால் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டுக்காக இந்தியப் பயண மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த மாதம்; இலங்கைக்கு வரவிருந்தனர்.

50 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும்; இந்தியாவிலிருந்து தூதுக்குழுவுடன் வரவிருந்தனர்.

எனினும் அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டமையானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here