கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 23ம் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களை தலா இரண்டு கோடி ரூபாய் காசு பிணையில் செல்லுமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 23ம் திகதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய கடற்றொழிலாளர்களும், கிளிநொச்சி- இரணைதீவு கடற்பரப்பில் 12 இந்திய கடற்றொழிலாளர்களும் என 16 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதில் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த 12 இந்திய கடற்தொழிலாளர்களை கடந்த 24ம் திகதி மாலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியைதையடுத்து கடற்தொழிலாளர்கள்  நேற்று(07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று 12 இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பிலான வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில். நீதிமன்ற நீதவான் பி.ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 12 இந்திய கடற்றொழிலாளர்களையும் தலா இரண்டு கோடி ரூபா பெறுமதியான காசுப்பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here