பிரச்சினைகள் அதிகரிக்கும் போது சுயமாகவே மக்கள் பொறுமை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள போராட்டங்களினால் நாடு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.