நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சபையில் உரையாற்றும் போது அவர் முன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 5000 ரூபா நாணயத்தாளை நீட்டிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் சபையில் கூச்சல் ஆரவாரம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து நாட்டின் நிலைமை மற்றும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் முஷாரப் எம்.பி கருத்து தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர் முன் சென்ற சாணக்கியன் 5000 ரூபா தாளொன்றை நீட்டியபடி அதனை பெற்றுக் கொண்டு பேசுமாறு சைகை செய்தார்.

 

எனினும், தான் நாட்டு மக்களுக்காகவே பேச வந்துள்ளதாகவும், டயஸ்போராவின் பணத்தை பெறுபவர்களுக்காக பேச வரவில்லை எனவும் முஷாரப் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முஷாரப் எம்.பியை பேச இடமளிக்குமாறு சாணக்கியன் எம்.பிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here