இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் மட்டுமே இருப்பதால் மேலதிகமாக ஒரு மணித்தியாலம் அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில் மூன்றாம் தவணையில் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதியும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் 17ஆம் திகதியும் நடத்துவதற்கு அமைச்சு தற்போது திட்டமிட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here