நாடாளுமன்றத்திற்கு சுற்றியுள்ள பிரதேசங்களில் பதற்றமான நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட போவதாக இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. நாட்டில் காணப்படும் நிலைமையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here