நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அந்த அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் ஜனாதிபதி இன்று காலை கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
எனினும் அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.