மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை இட்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதன்போது தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் தாம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நேற்று நள்ளிரவு பிரதமர் மற்றும் ஜனாதிபதி தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலகும் கடிதத்தை பிரதமர் மகிந்தவிடம் கையளித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலும் தனது பதவியை இராஜினமா செய்துள்ளார்.