நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.