இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்து பெண்ணொருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பதுளை பேருந்து நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி இன்று காலை 5.00 மணிக்குப் புறப்பட்ட மொனராகலை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்தே பெண்ணொருவர் விழுந்து காயமடைந்துள்ளார்.

பயணித்துக் கொண்டிருந்த பேருந்து பசறை 10ஆம் கட்டைப் பகுதியில் தவறுதலாகக் கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பசறை மௌசாகலைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாக பதுளை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here