தனியார் பேருந்து சேவைகள் இன்று மாலை முற்றாக ஸ்தம்பிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் தனியார் பயணிகள் பேருந்துகளில் 10 வீதமான பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு மற்றும் அரசு உறுதியளித்து போல், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாலைகளில், தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்பதே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்.