நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சீமெந்து விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here