எரிபொருள் மற்றும் மின்சார ஆகிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் பக்கம் இருந்து பிரச்சினைகளுக்கு பதிலளிக்கக் கூடிய தலைவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றனர். ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இந்த பிரச்சினை ஏற்படும் என்பதை அறிந்திருந்தது.

இதனால், நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை சிறப்புரிமைகளை பற்றி பேச வேண்டாம் என ஜனாதிபதி ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு பின்னர் கிடைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக மாற்றியமைத்தோம். எனக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் கிடைப்பதில்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுகளுடன் நான்கு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையிலான முறை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எமது அரசாங்கம் அவை அனைத்தையும் இரத்துச் செய்தது. அரசாங்கம் வாகனங்களை வழங்கி, மக்களின் பணத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களை பராமரித்து வருகிறது.

எமது அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வாகனங்கள் இல்லை. அவர்கள் பொது போக்குவரத்து சேவைகள் மூலமே கொழும்பு வருகின்றனர்.

கோவிட் நிலைமை மாறியுள்ளது. இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்தே வந்தனர். அந்த நாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாம் மாற்று வழிக்கு செல்ல வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here