இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் பொது மக்களுக்கும் உறுதியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திறைசேரியும் மத்திய வங்கியும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதை உறுதி செய்யும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்று முதல் ஏழரை மணித்தியாலங்கள் மின் தடையை அமுல்படுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here