நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பான கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு இடையில் கடுமையான பிளவு ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் அரச வங்கி முறை பாரியளவில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடையக் கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கருதுகின்றார்.