அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டுள்ள சர்வதேச நகர்வுகள் அதனை அடுத்து ஜனாதிபதி மற்றும்  ஒரு சில அமைச்சர்களின் கருத்துக்களை அவதானிக்கும் போது யாரோ ஒரு சிலரது தூண்டுதலுக்கு அமைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவே தெரிகின்றது என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது குறித்த விடயத்தில் மட்டுமல்ல சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடக்கம் அடுத்தடுத்து ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் பின்னணியில் ஒரு சதித்திட்டம் உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணையின் பின்னணியில் பாரிய கதையொன்று உள்ளது.

இப்போது அரசாங்கத்திற்கு எதிராக உள்ள சகல அணியினரும் இந்த நெருக்கடிகளை தமக்கு சாதகமாக கொண்டு செல்லவே நினைக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறும் வரையில் நாட்டில் பிரச்சினைகளை வளர்ப்பதே இவர்களின் நோக்கமாகும்.

விடுதலைப் புலிகளைப் போன்று அல்லாது, தற்போது சர்வதேச ஜிஹாத் குழுக்கள் இலங்கையிலும் ஊடுருவிக் கொண்டுள்ளன. இவர்கள் மிகத் தெளிவான நோக்கத்தில் பயணித்துக் கொண்டுள்ளனர். அவ்வாறான நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ழுமுமையாக நீக்க வேண்டும் என இந்த தரப்பு கூறுகிறது என்றால் அவர்களை அங்கொடைக்கு அனுப்ப வேண்டும் என்றே நான் கூறுவேன்.

ஒன்று அவர்கள் மனநிலை சரியில்லாது செயற்படுகின்றனர். இல்லையேல் திட்டமிட்டு நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆகவே பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here