நாட்டின் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க கடன்களை நம்பியே பயணிப்பதாகவும், கடன்கள் இல்லையென்றால் நாடு முழுமையாக வீழ்ச்சி கண்டுவிடும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சவால்களை சமாளிக்க எமக்கு மாற்று வழிமுறை எதுவும் இல்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்க்கட்சிகள் வெறுமனே விமர்சனங்களை மட்டுமே முன்வைக்காது இப்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க ஏதேனும் தீர்வுத்திட்டங்கள் இருந்தால் அதனையும் முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.