அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிழையான முறையில் ஆங்கிலம் பேசுவதால் அமைச்சரை கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடப்பட்டு வருகிறன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் குப்பைகள் கொட்டப்படுவதால் காகங்கள் அதிகளவில் அங்கு வந்து விமானங்களுக்கு தடை ஏற்படுத்துவதாக பசில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த பேட்டியின் போது “கப்புட்டாஸ் (காகம்) go have hit the plane” என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேட்டி எப்போது நடந்ததென தெரியவில்லை என்ற போதிலும் தற்போது இந்த கருத்து பலரால் பகிரப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here