ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது குற்றவியல் புறக்கணிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றவியல்  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுகக்ளிலும் இருந்து அவரை விடுவித்து விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக  தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச் சாட்டுகளில் சட்டமா அதிபர் இவருக்கு எதிராக   வழக்குகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here