நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா கொடுப்பனவுகளில் இரண்டு ஆலோசகர்கள் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

 

மின்சக்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேரா மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஆகியோரே ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளும், மின்சார சபையின் தலைவருக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்தநிலையில் புதிய ஆலோசகர்கள் இருவரும் அவர்கள் பதவியில் இருந்தபோது பெற்ற சம்பளம், கொடுப்பனவு, வாகன ஓட்டுநர், தொழில்நுட்ப மற்றும் பணியாளர்களுடன் போக்குவரத்து வசதிகள் மற்றும் அலுவலக இடம் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

 

இலங்கை மின்சார சபையில் முதல் தடவையாக இந்த பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் தலைவர் M. C. பெர்டினாண்டோவினால் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனவரி 24 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here