ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் மிகப் பெரிய வரியை அறவிட நிதியமைச்சு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட பல அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சரின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஏற்கனவே தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊழியர் சேமலா நிதியத்தில் கை வைப்பது குறித்த தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வாசுதேவ நாணயக்கார, மகிந்த அமரவீர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்களுக்கு நிதியமைச்சரின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here