பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட உத்தரவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.

குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், 40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here