இலங்கையின் பொலிஸாருக்கு ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

2022ஆம் ஜனவரி 10ஆம் திகதியன்று, இலங்கையின் காவல்துறையினருக்காக ஹிந்தி புலமை கற்கையை ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் 70க்கும் மேற்பட்ட காவல்துறை சிரேஸ்ட அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் முகமாக இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போது 10 பல்கலைக்கழகங்களிலும் 80 அரச பாடசாலைகளிலும் ஹிந்து கற்பிக்கப்படுவதாக இந்த நிகழ்வின்போது, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வினோட் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here