ஜனவரி மாதம் இறுதி மற்றும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இலங்கையின் மின்சாரத்துறை மிகவும் பாரதூரமான நெருக்கடியை நோக்கி பயணிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

சில சமயம், சில மணி நேரங்கள் கூட மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மின் விநியோகத்தை போதுமான அளவில் விநியோகிக்கக் கூடிய வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மின்சாரத்தை துண்டிப்பதால், இந்த நெருக்கடி தீராது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here