கொழும்பு நிதி மோசடி விசாரணை பிரிவின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திடீரென ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.