நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 637 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் 41 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த நிலையில் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 67 ஆயிரத்து 979 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.