வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மனைவியை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் தொடர்பு கொள்ள முயற்சித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த போது வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு ரிசாத் உரையாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நிலையான தொலைபேசி ஒன்றிலிருந்து முற்பகல் 11.55 மணியளவில் அந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது.

அழைப்பேற்படுத்திய ரிஷாட், வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தனது மனைவியுடன் பேச வேண்டும் எனவும், தொலைபேசி பேசி ஊடாக மனைவியை தொடர்புபடுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த அழைப்பிற்கு பதிலளித்த சிறைச்சாலை அதிகாரி அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

அது சிறைச்சாலை சட்டத்திற்கு எதிரான செயல் என அவர் குறிப்பிடடுள்ளார். ரிஷாட் அழைப்பேற்படுத்திய இலக்கம் நாடாளுமன்ற இலக்கங்களின் ஒன்று என சிறைச்சாலை திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஷாட் பதியூதினின் கையடக்க தொலைபேசி ஒன்று அண்மையில் அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here