சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வரும் பொது மக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் சிலர் சமூக இடைவெளியை கவனத்திற் கொள்ளாது நடந்து கொள்கின்றதாக தகவல் கிடைத்துள்ளது.
சமூக இடைவெளி மற்றும் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கிடையே கோவிட் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அத்துடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.