closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

 

வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் துறையில் கல்வி கற்கும் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் தாயின் மரண செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஷ்வரி வீதியில் வசித்து வந்த தாயொருவர் மாரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தகவலை மூத்த சகோதரன் வீட்டிலிருந்த தனது இளைய சகோதரனுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த இளைய சகோதரன், வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டவரின் தாயின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததாக அவரது மூத்த சகோதரன் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here