இலங்கையில் பொது மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில் வாகன கொள்வனவில் ஈடுபடும் மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இதன்மூலம் மாத்திரமே வாகன விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here