16 வயதுடைய சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி, மாமனாரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பாக அவரது மனைவி, மைத்துனர், தரகர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மைத்துனர் மற்றும் தரகரை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here