இலங்கையின் இன்றைய வானிலையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இதேவேளை இன்று இலங்கையின், பாணந்துறை, இரத்தினபுரி, பெலிஹுலோய, வெள்ளவாய மற்றும் பானம ஆகிய இடங்களில் சூரியன் நேரடி உச்சம் கொடுக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.