யாழ். மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுகோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் சராசரியாக இனங்காணப்பட்டு வரும் நிலையில் எண்ணிக்கை மேலும் உயர்வடைய வாய்ப்புண்டு.
நேற்றைய தினம் யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 37 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அன்டிஜன் பரிசோதனையில் 164 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை யாழில் 262 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தென்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆகவே சுகாதாரத் துறையினர் மக்களுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை மிகவும் பொறுப்புடன் எண்ணி, மக்கள் தத்தமது வீடுகளில் இயன்றவரை முடங்கி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.