காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்காக நீதி கேட்டு வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்துடன், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் உயிரிழந்தவர்கள், தமது காணாமலாக்கப்பட்ட சொந்தங்களுக்கான நீதியை எதிர்பார்த்திருந்து அது கிடைக்காத நிலையில் கவலையால் பல நோய்களுக்கு ஆட்பட்டு உயிரிழந்துள்ளனர்.
எனவே இந்த மரணங்கள் இயற்கையாக நடந்த மரணங்கள் அல்ல. இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற கொலையாகவே நாம் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.