நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து நிறுவனங்களிலும் கோவிட் அதிகாரியொருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அதிகாரியினூடாக நிறுவன ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை கண்காணித்து, மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரியுடன் தொடர்புகளை பேணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோவிட் தொற்று சமூகத்தில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here