நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த ஊரடங்கு செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே இந்த காலகட்டத்தில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டார்.

கடந்த 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் கொரோனா தடுப்பு செயலணி கூடிய வேளையில் எதிர்வரும் 13 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here