வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவுக்கான அமர்வு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் பங்கேற்றனர்.

இதனால் கோரம் காணாமையால் திகதி குறிப்பிடப்படாமல், தவிசாளர் தெரிவு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here