இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக விஷேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி, 8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இலங்கைக்கு 22 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here