தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது அல்லது நீக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முடிவு எட்டப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பு செயலணியுடன் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறும் கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும்

கொரோனா தொற்று பரவல் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி மறுபரிசீலனை செய்வார் எனவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு நீடிக்க ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே கோரியுள்ளார்.

அவ்வாறு இருவாரங்களுக்கு கட்டுப்பாடுகளை நீடித்தால் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பாதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here