கோவிட் வைரஸ் தொற்றின் மற்றுமொரு ஆபத்தான புதிய திரிபு பற்றி கண்காணிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் “Mu” என்ற புதிய வகை திரிபு கொலம்பியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியாக இந்த திரிபின் பெயர் B.1.621 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வகை திரிபானது தடுப்பூசிகளினால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வலுவானது என ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த திரிபின் முழுமையான ஆபத்து குறித்து கண்டறிவதற்கு மேலும் விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
“Mu” என்ற இந்த புதிய திரிபு கொலம்பியாவைத் தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.