நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும் அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here