2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும் இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு மேன்முறையீடு செய்யமுடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக குறித்த மேன்முறையீட்டை முன்வைக்க முடியும் என அந்த அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் நிவாரணக் கொடுப்பனவைப் பெற தகுதிபெற்றவர்களில் சுமார் 50 வீதமானோருக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here