கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசி எட்டு இலட்சம் ரூபாவுக்கு செலுத்தப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிலாபம் பகுதியை சேர்ந்த கொவிட் தொற்றுக்குள்ளான நபர் ஒருவருக்கு டொசிலிசுமாப் என்ற தடுப்பூசி ஒன்று 8 லட்சம் ரூபாய்க்கு செலுத்தப்பட்டுள்ளது.

தெமட்டகொட பிரதேசத்தில் இந்த தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியில் பொதுவாக விலை ஒரு லட்சம் ரூபாயாகும். வைத்தியரின் பரிந்துரைக்கமையவே தெமட்டகொட பிரதேச ஒசுசல உரிமையாளரிடம் இருந்து இந்த தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நோயாளி ஜப்பானில் இருந்து இலங்கை வந்த ஒரு நபராகும். இந்த தடுப்பூசி வைத்திய சேவை வழங்கும் பிரிவுகளில் அல்லது தனியார் வைத்தியசாலைகளில் இல்லை என சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் ஊடாகவே இலங்கைக்கு இந்த தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுகின்றது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 600 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என மருந்துகள் தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி மற்ற நாடுகளிலிருந்து பெற வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. டொசிலிசுமாப் தடுப்பூசி கொவிட் நிமோனியா நோயாளிகளுக்கும் மற்ற தீவிர நோய்களுக்கும் கொடுக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here