நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61 ஆயிரத்து 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் நேற்றுப் பிரவேசித்த 2 ஆயிரத்து 82 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 1,258 வாகனங்கள் நேற்று சோதனையிடப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here