இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வைத்தியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்றினை தடுப்பதற்காக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பெற்ற பின்னர் தனது மூளையில் இரத்தம் கட்டியதாக வைத்திய பரிசோனை நிறுவனத்தின் பிரதி இயக்குனர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது மோசடியாளர்களினால் சுகாதார அமைச்சு பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சிற்கு தொடர்புடைய அனைவரும் இன்று வரையில் வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

கொவிட் பரிசோதனையில் கொள்ளையடித்து மோசடி வியாபாரம் ஒன்றே மேற்கொள்ளப்படுகின்றது. சுகாதார அமைச்சினால் சரியான தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் வெளியே மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தள செய்தி சேவை ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பிரதி இயக்குனர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here