அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சேவையாளர்களுக்காக நாளைமறுநாள் 14ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தேசிய கொரோனா கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம், மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளிடம் சேவை அட்டை, நிறுவன பிரதானியின் கடிதம் என்பன கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை பின்பற்றுவதற்கு தேவையான சகல ஆலோசனைகளையும் பஸ் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.