மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும்வரை வெளியில் வரமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here