திருகோணமலை கடற்படை தளத்தில் இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி நேற்று ஆரம்பமான நிலையில் மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.

பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அமைப்பில் நடைபெறும் அதேவேளை, அதன் கடல் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 26 முதல் 30 வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here